ஈரானில் வீழ்ந்த F-15E: அமெரிக்க விமானிகள் மீட்பு வெற்றி|Trump Confirms Second US Pilot Rescue in Iran Operation

Spread the love

நேற்று அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகளை தாக்கி வீழ்த்தியிருந்தது ஈரான்‌ ராணுவம்.

அந்த விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்திருக்கின்றனர். அதில் ஒருவர் நேற்றே மீட்கப்பட்டார்.

இன்னொருவரை தேடும் பணி நடந்துகொண்டிருந்தது.

“அவரைக் கண்டுபிடித்துவிட்டோம்! என் சக அமெரிக்கர்களே, கடந்த சில மணிநேரங்களாக, அமெரிக்க ராணுவம், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

ஈரான் போர்

ஈரான் போர்

இது நமது அற்புதமான அதிகாரிகளில் ஒருவருக்காக மேற்கொள்ளப்பட்டது ஆகும். அவர் மிகவும் மதிக்கப்படும் ஒரு கர்னல். அவர் இப்போது பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

இந்த வீரமிக்க போர்வீரர், ஈரானின் அபாயகரமான மலைப்பகுதிகளில் எதிரிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தார். ஒவ்வொரு மணி நேரமும் நமது எதிரிகள் அவரை நெருங்கி கொண்டிருந்தனர்.

இன்னொரு பக்கம், அமெரிக்க தலைமைத் தளபதி, போர்ச் செயலாளர், கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் மற்றும் சக போர் வீரர்கள்‌‌ என 24 மணி நேரமும் அவரது இருப்பிடத்தைக் கண்காணித்து, அவரை மீட்பதற்காக விடாமுயற்சியுடன் திட்டமிட்டுக்கொண்டிருந்தோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *