ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி(வயது63). இவர் நேற்று அஜர்பைஜான் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அணைக்கட்டுகளை திறந்து வைப்பதற்காக சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன், மற்றும் அஜர்பைஜான் மாகான ஆளுநர் மாலிக் ரஹ்மத்தி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சென்றனர்.
ஹெலிகாப்டர் விபத்து
திறப்பு விழா முடிந்ததும் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது அஜர்பைஜான் ஜோல்பா பகுதியில் பறந்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அது மலைப்பகுதியில் விழுந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. வானிலை மோசமாக இருந்ததால் உடனடியாக தேடுதலை அதிகாரிகளால் தீவிரப்படுத்த முடியவில்லை.
இந்தநி¬லியில் டிரோன் மூலம் தேடுதலில் ஈடுபட்ட போது அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் மலையின் மேல் பகுதியில் விழுந்து தீப்பிடித்து நொறுங்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்
இதையடுத்து மீட்புகுழுவினர் அங்கு விரைந்து சென்ற போது இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன், மற்றும் அஜர்பைஜான் மாகான ஆளுநர் மாலிக் ரஹ்மத்தி உள்ளிட்ட ஹெலிகாப்டரில் பயணம் செய்த 8 பேரும் இறந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களது உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு எரிந்து இருந்ததாக கூறப்படுகிறது. மீட்பு குழுவினர் அனைவரது உடல்களையும் மீட்டனர். ஹெலிகாப்டர் விபத்தில் அவர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்து நடந்த 18 மணிநேரத்திற்கு பின்னரே உடல்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோடி இரங்கல்
இதற்கிடையே கடந்த மாதம் இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதல் போக்கில் அதிரடியாக ஈரான் டிரோன், ஏவுகனை தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. மேலும் கடுமையாக எச்சரித்தது. இதன் பின்னர் இந்த விபத்து சம்பவம் நடந்து இருப்பதால் இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஆனால் இதனை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
ஈரான் அதிபர் பர் இப்ராஹிம் ரைசி மரணத்திற்கு இந்தி பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மேலும் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் மறைவையொட்டி இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கேள்விகள்
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்பட்டதா? எதிரி நாடுகளின் தாக்குதலில் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதா என சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.
குறிப்பாக, இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன. ஆனால், அந்த 2 ஹெலிகாப்டர்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியிருப்பதும், ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் மலையில் மோதியிருப்பதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இடைக்கால அதிபராக
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இறந்ததைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் அடிப்படையில், ஈரானின் இடைக்கால அதிபராக அந்நாட்டின் முதல் துணை அதிபரான முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார்.அடுத்த 50 நாட்களில் புதிய அதிபர் தேர்ந்த்தெடுக்கப்பட வேண்டும்.
முகமது மொக்பர் செப்டம்பர் 1, 1955இல் பிறந்தவர் ஆவார். அவர், மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசியைப்போலவே, நாட்டின் அனைத்து விஷயங்களிலும் பேசப்படும் உச்ச தலைவர் அலி கமேனிக்கு நெருக்கமானவராகக் காணப்படுகிறார். 2021&ல் இப்ராஹிம் ரைசி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மொக்பர் முதல் துணை அதிபர் ஆனார். கடந்த அக்டோபர் மாதம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட ஈரானிய அதிகாரிகள் குழுவில் மொக்பருவும் சென்றிருந்தார்.