கடந்த சனிக்கிழமையில் (பிப்ரவரி 28) இருந்து ஈரானைத் தாக்கி வருகின்றன அமெரிக்காவும், இஸ்ரேலும்.
ஆனால், ஈரானைத் தாண்டி துபாய், கத்தார், குவைத், லெபனான் போன்ற நாடுகளிலும் தாக்குதல் நடந்து வருகின்றன.
எந்தெந்த நாடுகள் எந்தெந்த நாடுகளை தாக்குகின்றன?
தங்கள் மீதான தாக்குதலால் இஸ்ரேல், பஹ்ரைன், அபுதாபி, துபாய், கத்தார், குவைத், ஈராக், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் போன்ற நாடுகளின் மீது ஏவுகணைகளையும், டிரோன்களையும் ஏவி வருகிறது ஈரான்.
ஈரானைத் தாண்டி லெபனான் மீதும் தாக்குதல் நடத்துகின்றன அமெரிக்கா, இஸ்ரேல்.

“பழிக்கு பழி’ நடவடிக்கையாக இஸ்ரேலைத் தாக்கி வருகிறது ஈரான். ஆனால், அப்படி அமெரிக்காவை தாக்க முடியாது.
காரணம், இஸ்ரேலும், ஈரானும் ஓரளவுக்கு பக்கத்து நாடுகள். ஆனால், அமெரிக்கா அப்படி இல்லை.
இதனால், ஈரான் பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைந்திருக்கும் அமெரிக்க நிலை படைகளைத் தாக்குகிறது. இதன் மூலம், அமெரிக்காவை பழி வாங்குகிறது ஈரான்.