ஈரான் – இஸ்ரேல்: "அமெரிக்காவை நாங்கள் போருக்குள் இழுக்கவில்லை" – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

Spread the love

ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டுப் படை போர் தொடங்கி 20 நாள்கள் நெருங்கிவிட்டது. இன்றளவும் இருநாடுகளுக்கும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரான் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அது வதந்தி என இஸ்ரேல் மறுத்தது.

இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று ஊடகங்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது, “ஈரானின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் அணுசக்தித் திறன் பெரியளவில் சிதைத்திருக்கிறோம். ஈரானால் இனி யுரேனியத்தைச் செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கவோ முடியாது. ஈரான் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது.

நெதன்யாகு - ட்ரம்ப்
நெதன்யாகு – ட்ரம்ப்

போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைக் கிடங்குகள் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்படும்.

அமெரிக்காவை இந்தப் போருக்குள் இஸ்ரேல் கட்டாயப்படுத்தி இழுத்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிபர் ட்ரம்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்லிக் கொடுக்க முடியுமா? அவர் எப்போதும் அமெரிக்காவின் நலனுக்காகவே முடிவெடுப்பார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவுத்துறை மற்றும் ராணுவங்கள் மின்னல் வேகத்தில் இலக்குகளை எட்டி வருகின்றன. முழு மத்திய கிழக்கையும், ஏன் உலகத்தையே நாங்கள் பாதுகாத்து வருவதில் பெருமிதம் கொள்கிறோம்.

ஈரானின் முக்கிய எரிசக்தி வளமான South Pars எரிவாயு வயல் மீதான தாக்குதலில் இஸ்ரேல் தன்னிச்சையாகச் செயல்பட்டது. அதிபர் ட்ரம்பின் வேண்டுகோளை ஏற்று, அந்த எரிவாயு வயல்கள் மீதான அடுத்தகட்டத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம். ஈரான் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தில் இருக்கிறது.

இதுவரை வான்வழித் தாக்குதலாக மட்டுமே நடந்து வரும் இந்தப் போர், அடுத்தகட்டமாகத் தரைவழித் தாக்குதலாக மாறக்கூடும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஈரானின் தற்போதைய தலைமைக்குள் கடும் குழப்பமும் பதற்றமும் நிலவுகிறது.

இப்போது ஈரானை யார் வழிநடத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை. ஈரானிய மக்கள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி தங்கள் நாட்டின் எழுச்சிக்கு வழிவகுக்க வேண்டும். அந்த நாட்டின் எதிர்காலம் மக்கள் கையிலேயே இருக்கிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *