“ஈரானுக்குள்ள அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டு போட்டுட்டாங்களாம்’ என்று நாம் பேசிக்கொண்டிருந்த ‘எங்கோ’ நடக்கும் போரின் தாக்கம் இப்போது நமது வீடுகளில் வந்து நிற்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) வழக்கம் போலானதாக இல்லை. ஆம்… அன்று தான் வீட்டு உபயோகச் சிலிண்டர்களுக்கு பல கட்டுப்பாடுகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டன.
சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னை தீரும் வரை, வணிக சிலிண்டர் விநியோகம் கிடையாது… 25 நாள்களுக்கு முன் சிலிண்டர் புக் செய்தவர்களுக்கே முன்னுரிமை… சிலிண்டரைப் பதுக்கக் கூடாது… இப்படிப் பல நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டது.
இதையொட்டிப் பல விஷயங்கள் ‘கடகட’வென நடந்தேறின…
ஹோட்டல்களில் உணவு பட்டியல்கள் குறைக்கப்பட்டன,
சில ஹோட்டல்களை மூடியே சென்று விட்டனர்,
ஹாஸ்டல்களில் டீ, காபி, தோசை, சப்பாத்தி, இட்லி ஆகியவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
நமது வீடுகளில் வரிசையாக சிலிண்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டன. இதனால், கேஸ் சிலிண்டர் புக்கிங் ஹெல்ப் லைனே ரீச் ஆகாமல் போனது…
இப்படி ஏகப்பட்ட பயம், பதற்றம் நம்மிடையே இருந்தது… இன்னமும் இருந்து வருகிறது.