ஈரான் போர் இரண்டு வாரம் நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு|Trump Delays Iran Attack as Hormuz Strait Deal Emerges

Spread the love

“செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி – கிழக்கு நேர மண்டலம்’ என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) ஈரானுக்கு நேரம் குறித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அதையடுத்து நேற்று காலை (அமெரிக்க நேரப்படி), ‘ஈரான் நான் சொன்ன நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கவில்லை என்றால், ஈரானின் ஒட்டுமொத்த நாகரிகமும் அழிக்கப்படும்’ என்று வேறு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஈரான் போர் ‘இரண்டு வாரம் நிறுத்தம்’ என அறிவித்துள்ளார் ட்ரம்ப்.

ஹார்முஸ் நீரிணை: அமெரிக்கா - ஈரான் போர்

ஹார்முஸ் நீரிணை: அமெரிக்கா – ஈரான் போர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக வலைதள பதிவு…

“பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீருடனான பேச்சுவார்த்தை அடிப்படையில், அவர்கள் கேட்டு கொண்டதன் படி, இன்று ஈரானிற்கு அனுப்படவிருந்த படைகளை நிறுத்தி வைக்கிறேன்.

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக, உடனடியாக, பாதுகாப்பாக திறக்க ஒப்புக்கொண்டுள்ளதால், ஈரான் மீதான குண்டு வீச்சு மற்றும் தாக்குதலையும் நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளேன்.

இது ஒரு இருதரப்புப் போர்நிறுத்தமாக இருக்கும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *