ஈரான் போர்: ட்ரம்புக்கு செனட் ஆதரவு, தீர்மானம் தோல்வி|53-47 Vote: Senate Backs Trump on Iran War

Spread the love

அமெரிக்க அரசியலமைப்பு சாசனத்தின் படி, அதிபரால் ஒரு போரைத் தொடங்க முடியாது. அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை.

ஆனால், ஈரான் போரைத் தொடங்கி வைத்தது என்னவோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். இதற்கு அவர் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸிடம் ஒப்புதல் வாங்கவில்லை.

இதனால், ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமெரிக்க செனட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டிம் கைன் கொண்டு வந்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு 47 பேர் சாதகமாகவும், 53 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராகத்தான் பெரும்பாலும் வாக்களிக்கப்பட்டுள்ளதால், ட்ரம்ப், ஈரான் போரைத் தொடர்வதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றம்
Martin Falbisoner

8 வாரங்களுக்கு…

இந்த இடத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத், “ஈரான் போர் இன்னும் 8 வாரங்கள் வரை தொடரலாம்’ என்று கூறியது நினைவுக்கூரத்தக்கது.

ட்ரம்பிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த ராண்ட் பால் ஆவார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *