உலகில் எண்ணெய் வளம் மிகுந்த நாட்டில் டாப் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு, ஈரான்.
மேலும், உலக நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் முக்கிய போக்குவரத்து பாதை, “ஹார்முஸ் ஜலசந்தி’. இது ஈரான் அருகில் தான் அமைந்துள்ளது.
ஈரானில் இப்போது போர் நடந்து வருகிறது. கூடவே, ஹார்முஸ் ஜலசந்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர்களை விரைவில் தொடும் என்கிற பேச்சு இருந்து வருகிறது.

“ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 டாலர்களைத் தொடும் என்பது வெறும் ‘வாய்ப்பு’ தான்.
பெரியளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் டாப் நாடு, ‘ஈரான்’. போர் காரணமாக, அந்த நாட்டில் இருந்து வரும் கச்சா எண்ணெய் சப்ளை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம், ஹார்முஸ் ஜலசந்தி மூலம் எண்ணெய் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால், ‘சுற்றி வரும்’ வழியில் தான் எண்ணெய் பிற நாடுகளுக்குச் செல்லும். இதனால், போக்குவரத்து செலவு அதிகரிக்கும். விளைவு, கச்சா எண்ணெயின் விலையும் அதிகரிக்கும்.