ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர், துபாய் வரையில் நீண்டு வருகிறது.
இதனால், துபாயில் இருந்து பிசிக்கல் தங்கத்தை ஏற்றுமதி செய்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை Reuters செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது.
ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ள தகவலின் படி, துபாயின் தங்கம் புல்லியன் வர்த்தக மையத்தில் இருந்து இறக்குமதியாகும் மற்றும் துபாயில் இருந்து ஏற்றுமதியாகும் தங்கத்திற்கு வரும் நாள்களில் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளன… விதிக்கப்பட உள்ளது.
இந்த மையம் தான் இந்தியா, ஹாங்காங், சுவிட்சார்லாந்து ஆகிய நாடுகளின் டாப் தங்கம் ஏற்றுமதியாளர்.
பொதுவாக, தங்கத்தின் பாதுகாப்பு கருதி விமானத்தில் தான், அது பிற நாடுகளுக்கு அனுப்பப்படும்.
ஈரான் துபாய் மீது நடத்தி வரும் தாக்குதலால், அங்கே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், தங்கம் 2 – 3 நாள்களுக்கு துபாயில் இருந்து கிளம்புவது கேள்விக்குறி ஆகியுள்ளது.
ஏற்கெனவே போர் பதற்றத்தால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சர்வதேச சந்தையில் கிட்டத்தட்ட 5,400 டாலருக்கு வர்த்தகம் ஆகி வருகிறது.
இப்படி முக்கிய நாடுகளில் இருந்து தங்கத்தின் சப்ளை சற்று தடைப்பட்டால், தேவை கருதி தங்கம் விலை இன்னும் எகிறலாம்.