ஈரான் போர் தாக்கம்: துபாய் தங்க வர்த்தகம் பாதிப்பு, இந்தியாவில் விலை உயரும் ஆபத்து|Flights Halted: Iran War Disrupts Dubai Gold Trade

Spread the love

பத்தாவது நாளாக ஈரானில் போர் தொடர்கிறது. ஈரானில் தொடங்கிய தாக்குதல் துபாய், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா என வளைகுடா நாடுகளுக்கும் பரவி உள்ளது.

இதனால், கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு மட்டும் பிரச்னை இல்லை. துபாய் தங்களிடம் இருக்கும் தங்கத்தை வணிகம் செய்யவும் சத்தமில்லாமல் தத்தளித்து வருகிறது.

ஆசிய நாடுகளுக்கு அதிகளவில் துபாயில் இருந்து தான் தங்கம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுவிட்சர்லாந்து மற்றும் லண்டனில் இருந்து வரும் தங்கம் கூட, துபாய்க்கு வந்த பிறகு தான் ஆசிய நாடுகளுக்குப் பயணம் ஆகின்றன.

தங்கத்தின் பாதுகாப்பு கருதி, அது எப்போதும் விமானத்தில் தான் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும். இப்போது துபாயில் நிலவும் பதற்றத்தால், பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

இதனால், பிசிக்கல் தங்கத்தை துபாயால் வணிகம் செய்ய முடியவில்லை.

சரி… விமானங்கள் மூலம் தான் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அருகில் இருக்கும் நாடுகளுக்கு சாலை வழியாக வணிகம் செய்யலாமே என்று பார்த்தால் அதிலும் சிக்கல் உள்ளதாம்.

சாலை வழியாக தங்கத்தை கொண்டு செல்வதற்கு அதிக செலவுகளும் ஆகும்… பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *