மேற்காசிய போர் தொடங்கியதில் இருந்து இந்தியப் பங்குச்சந்தை ஏற்றம், இறக்கம் என்று தான் இருந்து வருகிறது.

“அபுதாபி, துபாய், ஓமன், குவைத் போன்ற நாடுகள் ஏதோ ஒரு வகையில் ஈரான் போரின் தாக்கத்தைச் சந்தித்து இருக்கின்றன. ஆனால், இந்த நாடுகளின் சந்தைகள் பெரியளவில் சரிவுகளைச் சந்திக்கவில்லை.
நேற்றைய தின நிலவரத்தின் படி, அபுதாபி சந்தை (ADX General) வெறும் 133 புள்ளிகள் மட்டுமே இறங்கியுள்ளது. ஒரு மாதத் தரவுகளை எடுத்துப் பார்த்தாலும், 7 சதவிகிதம் மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது.
இஸ்ரேல் சந்தை (Tel Aviv 125 Index) நேற்று 9 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. ஓமன் (Muscat Stock Exchange (MSX)) சந்தையும் 9 புள்ளிகள் ஏற்றத்துடனேயே முடிந்திருக்கிறது.