ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கும் என இஸ்ரேல் அறிவிப்பு:நெதன்யாகு டிரம்ப் மோதல் உச்சகட்டம்   – Kumudam

Spread the love

ஈரான் மீது கடந்த 28-ம் தேதி முதல் அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.  ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும். ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் முயற்சி செய்து வருகின்றன..

இந்த போரின் காரணமாக உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. உலக நாடுகள் அழுத்தம் காரணமாக  ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிரம்ப் நேற்று அறிவித்து இருந்தார். ஆனால் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஈரானின் எச்சரிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பணிந்துவிட்டார் என்று விமர்சனமும் செய்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் ஆதரவால் ஈரான் உடனான போரில் முக்கிய இலக்குகளை அடைய வாய்ப்பு உள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் அணு திட்டங்களை முறியடித்து வருகிறோம். ஹிஸ்புல்லா மீது கடுமையான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். டிரம்ப் அறிவிப்புக்கு எதிராக நெதன்யாகு தாக்குதல் தொடர்பாக அறிவித்து இருப்பது, அமெரிக்க, இஸ்ரேல் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *