ஈரோடு: "பழனிசாமியின் லேட்டஸ்ட் துரோகம் கோவை, மதுரை மெட்ரோ திட்டம்" – முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

Spread the love

ஈரோடு மாவட்டம் சோலாரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ரூ.278.62 கோடி மதிப்பில் 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கடந்த ஆண்டு ஈரோடு வந்தபோது பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் சிலை அறிவித்தேன். இன்று அந்தச் சிலை திறக்கப்பட உள்ளது. தன்னை மேற்கு மண்டலக்காரர் என்று சொல்லிக் கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இதைச் செய்தாரா?

சோலார் பஸ் ஸ்டாண்ட்
சோலார் பஸ் ஸ்டாண்ட்

அவர் செய்ததெல்லாம் துரோகம்தான். பச்சை துண்டு போட்டுக்கொண்டு தமிழ்நாட்டுக்குப் பச்சை துரோகம் செய்யும் பழனிசாமி என்று சொன்னவுடன், அவருக்குக் கோபம் வந்தது.

நான் ஒரு விவசாயி, இப்போது விவசாயம் செய்கிறேன் என்றார். பழனிசாமி இப்போதும் துரோகம் செய்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் விவசாயி என்று சொல்வது விவசாயிகளை அவமானப்படுத்துவதற்குச் சமம்.

நெல் கொள்முதலில் தமிழ்நாட்டு கோரிக்கையை பாஜக அரசு நிராகரித்துவிட்டது. பழனிச்சாமி உண்மையான விவசாயியாக இருந்தால், பிரதமரை தமிழ்நாட்டு கோரிக்கையை ஏற்க வேண்டும் எனச் சொல்லியிருக்க வேண்டும்.

டெல்லியில் பல கார்களில் சென்று, யார் யாரையோ சந்திக்கிறீர்கள். தமிழ்நாடு விவசாயிகளுக்காக பிரதமரைச் சந்திக்க டெல்லி சொல்கிறேன் என்று சொல்லுங்கள். தமிழ்நாட்டு சார்பாக நானே கார் அனுப்புகிறேன்.

பழனிசாமியின் புதிய லேட்டஸ்ட் துரோகம் கோவை, மதுரை மெட்ரோ திட்டம். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து உள்ளது. இப்போது சென்செக்ஸ் கணக்கெடுப்பு நடத்தி மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்போது உள்ளார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தத் திட்டம் முடிவடையும்போது 2035 ஆகி விடும். மக்கள்தொகை குறைவாக உள்ள வட மாநிலங்களுக்கு மெட்ரோ கொடுக்கிறார்கள்.

பாஜகவிற்கு வாக்களிக்காத தமிழகத்திற்கு எதையும் தரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்தால் மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படும் என்று பழனிச்சாமி மற்றும் பாஜக கோவை சட்டமன்ற உறுப்பினர் சொல்கிறார்.

திமுக ஆட்சியில் உள்ளதால்தான் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.

இவர்களெல்லாம் தமிழகத்திற்குக் கொடுக்கும் குடைச்சல் போதாமல், நிரந்தரமா கெடுக்க வேண்டும் என ஆளுநர் இருக்கிறார். தமிழகத்திற்குச் சேவை செய்ய வந்ததாக ஆளுநர் சொல்லிவிட்டு, தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்னை இருக்கிறது என்று பேசுகிறார்.

தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்னை இருக்கிறது. தீவிரவாத போக்கு நிலவக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளதாம், தமிழ் மொழி வளர்ச்சிக்காக எதுவும் நடக்கவில்லை, அனைவரும் ஆங்கிலம் படிக்கிறார்கள் இப்படி எல்லாம் அவர் பேசுவதற்கு உள்ளார் ஆளுநர்.

தீவிரவாதத்தைத் தடுக்க முடியாத பாஜக ஆட்சியைப் புகழ்ந்து பேசி உள்ள ஆளுநர், அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் எனத் திமிரெடுத்து பேசி உள்ளார். அவர் வகிக்கக்கூடிய அரசியல் சாசன பொறுப்பிற்குத் துளியும் தகுதியற்ற தரவு குறைவான பேச்சு இது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

எங்கள் மாணவர்கள் உலக வாய்ப்புக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். தமிழ் மொழி பற்றி நீங்கள் வகுப்பு நடத்த வேண்டாம்.

ஆளுநர் ரவி நீங்கள் தமிழ் வெறுப்பைத் தொடர்ந்து பேச வேண்டும். அப்போதுதான் எங்களது வேலை எளிமையாகும். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டார்.

இந்த ஆண்டு புதிய வழித்தடத்திற்கான ரயில் சேவைக்கு 31,458 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தெற்கு ரயில்வேவிற்க மத்திய அரசு 1% சதவிதம் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். பாஜக செயற்கைப் பேரிடர் செய்கிறது” என்று பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *