ஈரோடு: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் பேச்சு | Erode: Tvk propaganda general secretary Arun Raj speaks about former BJP state president Annamalai

Spread the love

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக இளைஞரணி கூட்டத்திற்கு என்ன விதிமுறைகளை விதிக்கப்பட்டன? அதுவே தவெக கூட்டங்களைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்.

இந்த நெருக்கடியை எல்லாம் தாண்டிதான் கூட்டம் நடத்துகிறோம். தவெக தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் தங்களது கடமையைப் பொறுப்புடன் செய்ய வேண்டும்.

பனையூரில் விஜய்

பனையூரில் விஜய்

திருப்பரங்குன்றம் பிரச்னை தேவையில்லாதது. தமிழ்நாட்டில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள். அனைத்து மதங்களையும் பின்பற்றும் மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *