ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

Dinamani2f2024 12 142f7qzyuizg2fevkse3.jpg
Spread the love

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவருக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை காலமானார். அவரது உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று அவரது இல்லத்துக்குக் கொண்ட செல்லப்பட்டு அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை சத்தியமூர்த்தி பவனில் கட்சித் தொண்டர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்த வைக்கப்படவிருக்கிறது.

இவரது உடல் சென்னை ராமாபுரததில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன்பிறகு நாளை சென்னையிலேயே இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு. கட்சிரஸ் கட்சியினர் தன்மானத் தலைவர் என்று வாஞ்சையோடு அழைப்பார்கள்.

மல்லிகாரஜுன கார்கே இரங்கல்..

ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் மற்றும் பெரியாரின் கொள்கைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். தமிழக மக்களின் நலனுக்காகப் பாடுபட்டவர்..

திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

இளங்கோவன் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தவர் ஈவிகேஎஸ். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். இவரது மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பு என்று அவர் கூறியுள்ளார்.

விசிக எம்ப ரவிக்குமார் இரங்கலில்,

மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் ஈவிகேஸ். பல்வேறு விமர்சனங்கள் வந்தபோதிலும் தனது கருத்தை ஆணித்தரமாகவே தெரிவித்து வந்தார் என்று அவர் கூறினார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மனதில் பட்டதைப் பேசுவார்… ஜெயக்குமார் இரங்கல்..

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *