செபியின் ‘எல்ஓடிஆர்’ விதிகளின் படி மின்னணு முறையில் மட்டுமே பணத்தை செலுத்த அனுமதிக்கப்படும். குறிப்பாக ரூ.1,500 க்கும் அதிகமான தொகைகளுக்கு மின்னணு பரிமாற்றங்கள் தோல்வியுற்றால் காசோலைகள் அனுமதிக்கப்படுகின்றன.
ஒருவேளை முதலீட்டாளர்களின் வங்கி விவரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அல்லது பணப் பரிவர்த்தனை தோல்வியுற்றால் நிறுவனங்கள் காசோலைகளை அனுப்ப வேண்டும்.
சமீபத்திய தரவுகளின்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட டாப் 200 நிறுவனங்களில் உள்ள முதலீட்டாளர்களின் வங்கி கணக்கு மின்னணு முறையில் ஈவுத்தொகை செலுத்திய போது 1.29 சதவிகிதம் தோல்வியடைந்தது என்று செபி தெரிவித்துள்ளது.