உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Dinamani2f2024 08 232fqstag0il2fpm20modi.jpg
Spread the love

உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசி வருகிறார்.

புது தில்லியிலிருந்து புதன்கிழமை போலந்து புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கு வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

பின்னர் அங்கிருந்து குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் நேற்று புறப்பட்ட நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை உக்ரைன் சென்றடைந்தார்.

இதையடுத்து தலைநகர் கீவிற்கு வந்த பிரதமர் மோடியை ஆரத் தழுவி வரவேற்றார் ஸெலென்ஸ்கி. கீவில் உள்ள அருங்காட்சியகத்தில் தற்போது இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசி வருகின்றனர்.

20240823044L

ரஷியாவின் போரினால் உக்ரைனின் நிலை குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படலாம் என்று தெரிகிறது.

முன்னதாக, ரஷிய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி சென்றார். மேலும் அங்குள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார்.

ukraine

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியின் அழைப்பை ஏற்று சென்றுள்ள பிரதமர் மோடி, உக்ரைன் நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் ஆவார்.

ரஷியா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான பிரச்னையில் இந்தியா நடுநிலையாகவே இருக்கிறது.

20240823049L

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி, ரஷியா சென்றிருந்தார். ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேசினார்.

20240823050L

இதையடுத்து தற்போது உக்ரைன் சென்றுள்ளது உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *