உக்ரைன் மீது கோபம் ஆன ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி – என்ன நடந்தது?|Trump Criticises Zelensky for ‘No Thanks’; Ukraine Leader Replies

Spread the love

வரி விதிப்பு, எச்சரிக்கை, மிரட்டல்… – இப்படி என்ன செய்து பார்த்தும், ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்தியபாடில்லை.

இந்தப் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓயாமல் முயன்று வருகிறார். ஆனால், அவரது எந்த முயற்சிக்கும் இதுவரை பலனே இல்லை.

ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி தாக்குதல் நடத்திகொண்டே தான் இருக்கின்றன.

இந்த நிலையில் தான், ட்ரம்ப் தற்போது உக்ரைன், ரஷ்யாவை கடுமையாக சாடியுள்ளார்.

தனது ட்ரூத் பக்கத்தில், உக்ரைன் தலைமையை சாடி, “உக்ரைனின் தலைமை இதுவரை அமெரிக்காவின் முயற்சிகளுக்கு எந்த நன்றியையும் காட்டவில்லை.

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கிகொண்டே தான் இருக்கிறது.

அமெரிக்கா இன்னமும் உக்ரைனுக்கு வழங்க நேட்டோவிற்கு மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆயுதங்களை விற்று வருகிறது.

இந்தப் போர் தொடங்கும்போது, நான் அதிபராக இருந்திருந்தால், புதின் உக்ரைனை தாக்கியிருக்கவே முடியாது” என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *