“உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத ஸ்டாலின் அரசைத் தூக்கி வீசிடுவோமா?” – விஜய்| TVK vijay speech in perambur about dmk government

Spread the love

வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு தவெக தலைவர் விஜய் தனது தொகுதியான பெரம்பூரில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறார்.

பிரசாரத்தில் பேசிய விஜய், “தாய் வீட்டில் இருந்து பரப்புரையைத் தொடங்குகிறேன். எனக்கு பிடித்த இடம் பெரம்பூர். தமிழ்நாட்டை இந்த நிலைமைக்குக் கொண்டுவர தீயசக்தி திமுகதான் காரணம்.

டாஸ்மார்கில் மட்டுமே ரூ. 1000 கோடி ஊழல் செய்திருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு இல்லாத போதைப்பொருள் அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்றியாக வேண்டும்.

தவெக விஜய்

தவெக விஜய்

இது நாடா? இல்ல காடா? போலீஸ் என்ற ஒன்று இங்கு இருக்கிறதா? இல்லையா? உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்காத ஸ்டாலின் அரசைத் தூக்கி வீசிடுவோமா? பல இடங்களில் அடிப்படை வசதி கூட இல்ல.

தீய சக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ளதா? ஸ்டாலின் சாருக்கு மக்களைப் பற்றி கவலையே இல்லை. இந்த 5 வருடத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளை அடிப்பதுதான் முக்கியம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *