“உங்களை கட்டிப் பிடிக்கலாமா” நடிகைக்கு கல்லூரி மாணவன் பாலியல் தொல்லை – Kumudam

Spread the love

சென்னை தி.நகர் தாமஸ் சாலையில் பிரபல தனியார் ஓட்டல் (ஒயாசீஸ்)செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் கடந்த 6 மாதங்களாக ஆலந்தூரை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளம் மலையாள நடிகை இந்த ஓட்டலில் ஒரு மாதத்திற்கு அறை எடுத்து தங்கியுள்ளார்.

இரவு உணவு ஆர்டர் செய்ய நடிகை இண்டர்காமை பயன்படுத்திய போது இண்டர்காம் வேலை செய்யாததால் நேராக வரவேற்பறைக்கு சென்று அங்கிருந்த 20 வயதுடைய ஓட்டல் ஊழியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். உடனே அந்த ஓட்டல் ஊழியர் நடிகை அறைக்கு சென்று இண்டர்காமை சரிசெய்து விட்டு நடிகையிடம் நீங்கள் மலையாள நடிகை தானா ? என கேட்டு உங்களை கட்டிப்பிடிக்கலாமா என மூன்று முறை கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.

உடனே பயந்துபோன நடிகை இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மாம்பலம் போலீசார் ஓட்டலுக்கு விரைந்து சென்று நடிகையிடம் தகாத முறையில் பேசிய இளைஞரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆலந்தூரில் வசித்து வருவதும் தனியார் கல்லூரியில் படித்து வரும் இளைஞர் பகுதி நேரமாக ஓட்டல் வரவேற்பாளராக வேலை பார்த்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் நடிகையை அழைத்து சென்று இண்டர்காமை சரி செய்து விட்டு உணவு ஆர்டர் எடுத்து கொண்டு வந்து விட்டதாக இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை முறையாக புகார் அளிக்க விரும்பவில்லை என்று இருப்பினும் காவல்துறையினர் புகாரை பெற்று சிஎஸ்ஆர் வங்கி உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி போலீசார் கல்லூரி மாணவரிடம் இனி இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும் விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என கூறி எழுதி வாங்கிக் கொண்டு மாணவனை அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மலையாள நடிகையும் அந்த ஓட்டலை காலி செய்து கொண்டு வேறோரு ஓட்டலுக்கு சென்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *