சில நேரங்களில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யும்போது, வேலை செய்யாமல் போய் விடுகிறது. இதனால், டோல்கேட்டில் தேவையில்லாத டென்சன் ஏற்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம், “KYV (Know Your Vehicle)’ அப்டேட் செய்யாமல் இருப்பதே ஆகும்.
இந்தப் பிரச்னையை சந்தித்தவர்கள், சந்திக்காதவர்கள் என ஃபாஸ்ட் டேக் வைத்திருக்கும் அனைவருமே KYV-ஐ அப்டேட் செய்வது மிக அவசியமாகும்.

Know Your Vehicle என்பதன் சுருக்கமே KYV. அதாவது உங்களுடைய ஃபாஸ்ட் டேக் குறிப்பிட்ட வாகனத்துடன் தான் இணைந்திருக்கிறது என்பதன் ஆதாரம் தான் இது.
KYV செய்யும்போது, உங்கள் ஃபாஸ்ட் டேக்கை வேறு யாரும் பயன்படுத்தாமல் தடுக்க முடியும். மேலும், உங்கள் வாகனம் குறித்த அனைத்து தகவல்களையும் அரசாங்கத்திற்கும் பக்காவாக சென்றுவிடும்.