அந்த பதிவில் அமிஷா தெரிவித்திருப்பதாவது, “கடந்த ஜூன் 28ஆம் தேதியில் வெளியில் செல்வதற்காக ரேபிடோவில் முன்பதிவு செய்திருந்தேன். பின்னர், நான் முன்பதிவு செய்யப்பட்ட பைக்கில் பயணித்தேன். அந்த பயணத்தின் போது, டிரைவர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல், விதிகளை மீறியபடியே வாகனத்தை ஓட்டிச் சென்றார்.
ஒருசமயத்தில் கடுபீசனஹள்ளி சாலையருகே சென்றபோது, அவர் இண்டிகேட்டரைப் பயன்படுத்தாமல் வாகனத்தைத் திருப்பினார். இதனையடுத்து, எங்கள் பின்னால் வந்து கொண்டிருந்த காரில் வந்த ஒருவர் எதிர்பாராதவிதமாக நாங்கள் சென்ற பைக்கை மோதிவிட்டார்.
கார் மோதியதில் பைக் நிலைதடுமாறி, நானும் ரேபிடோ டிரைவரும் கீழே விழுந்தோம். ஆனால், ரேபிடோ டிரைவர் விரைவாக அவருடைய பைக்கை எடுத்துச் சென்று ஓடிவிட்டார். எங்களை மோதிய அந்த காரில் வந்தவர் தான் என்னை மருத்துவமனையில் அனுமதித்தார்.
இந்த சம்பவம் குறித்து ரேபிடோவின் வாடிக்கையாளர் சேவையை தொடர்புகொண்ட போது, காப்பீட்டு உரிமைக்காக மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இனி யாரும் ஒருபோதும் ரேபிடோவை பயன்படுத்த வேண்டாம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்கள் என்றால் இதுபோன்ற பைக் டாக்ஸியை பயன்படுத்தாதீர்கள்” என்று கூறியுள்ளார்.