உங்கள் வீட்டுக்குப் பொருத்தமான ஏ.சி-யைத் தேர்வு செய்வது எப்படி? | How to select the right AC for your home

Spread the love

சொட்டச்சொட்ட வியர்க்கும் அளவுக்கு அனலாகக் கொளுத்தப் போகிறது கோடை வெயில். மின்விசிறிகளே சுழன்று சுழன்று களைத்திருக்கும் இந்த வேளையில், பலரும் எதிர்பார்ப்பது ஒரு ஜில்-ஜில் ஏ.சி-யைத்தான். ஆனால், ஒரு மின்விசிறி வாங்குவதுபோல சாதாரணமாக ஏர்கன்டிஷனர்களை வாங்கிவிடக் கூடாது. ஒரு ஏ.சி வாங்குவதற்கு முன்பு நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றைக் கவனத்தில் கொள்வதன் மூலமே, உங்களால் உங்கள் வீட்டுக்குப் பொருத்தமான ஏ.சி-யைத் தேர்வுசெய்ய முடியும்.

  விண்டோஸ் Vs ஸ்ப்ளிட் ஏ.சி

ஏ.சி-யைப் பொருத்தமட்டில், இன்டர்னல் யூனிட் மற்றும் எக்ஸ்டர்னல் யூனிட் என இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. காற்றை உள்ளிழுக்கும் மற்றும் காற்றை வெளியே அனுப்பும் அமைப்பானது வீட்டுக்குள் இருக்கும். இது இன்டர்னல் யூனிட். கம்ப்ரசர் மற்றும் கண்டன்சர் ஆகிய இரண்டும் வீட்டுக்கு வெளியே இருந்தால், அது எக்ஸ்டர்னல் யூனிட்.

இவை இரண்டும் இணைந்து செயல்பட்டால் தான் ஒரு ஏ.சி இயங்க முடியும். இந்த இரண்டு அம்சங்களின் இருப்பிடத்தைப் பொறுத்துதான் விண்டோஸ் மற்றும் ஸ்ப்ளிட் ஏ.சி என தனித்தனியாகப் பிரிக்கிறோம். உங்கள் வீட்டின் அமைப்பு, தேவை ஆகியவற்றைப் பொறுத்து இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம்.

விண்டோஸ் ஏ.சி-யில் இந்த இரண்டு யூனிட்டுகளும் ஒன்றாக இருக்கும். எனவே, இரண்டுக்கும் தனித்தனி இடம் தேவையில்லை. உங்கள் வீட்டு அறையில் இருக்கும் ஜன்னல்களில் இதனைப் பொருத்திக்கொள்ளலாம்.

ஆனால், ஸ்ப்ளிட் ஏ.சி என்பது வடிவமைப்பில் முற்றிலும் வேறாக இருக்கும். அதாவது, இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் யூனிட் இரண்டும் ஒரே இடத்தில் இல்லாமல், தனித்தனியாக இருக்கும்.

இந்த இரண்டில், விண்டோஸ் ஏ.சி சிறிய அறைகளுக்கு மிகவும் ஏற்றது. ஸ்ப்ளிட் ஏ.சி-யை விடவும் கொஞ்சம் கூடுதலான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். பொதுவாக, பெரும்பாலான வீடுகளில் ஸ்ப்ளிட் ஏ.சி-யைத்தான் பொருத்தியிருப்பார்கள். காரணம், விண்டோ ஏ.சி-யை விடவும் இது கொஞ்சம் குறைவான மின்சாரம் எடுக்கக்கூடியது. வேகமாக இயங்கி அறையைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது. விண்டோஸ் ஏ.சி-யை விடவும் சத்தம் குறைவாகவும், இன்ஸ்டால் செய்வதற்கு எளிதாகவும் இருக்கும்.

  ஏ.சி-யின் கொள்ளளவு

நீங்கள் ஏ.சி தொடர்பான விளம்பரங்களில் அது எத்தனை டன் கொள்ளளவு கொண்டது எனக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். இந்த கொள்ளளவைப் பொறுத்துதான் உங்களுக்கான சரியான ஏ.சி-யைத் தேர்வு செய்ய முடியும்.

நீங்கள் உங்கள் அறைகளுக்கேற்ப சரியான கொள்ளளவுகொண்ட ஏ.சி-க்களைத் தேர்வு செய்யவில்லை எனில், அதனால் கூடுதலாக ஏ.சி-க்கோ, மின்சாரத்துக்கோ பணம் செலவு செய்ய நேரிடலாம். உதாரணமாக, 2 டன் கொள்ளளவுகொண்ட ஏ.சி தேவைப்படும் இடத்தில் ஒரு டன் அளவிலான ஏ.சி பொருத்தப்பட்டால், உங்களின் ஏ.சி-க்கான விலை குறையலாம். ஆனால், அதன் வேலைப்பளூ அதிகரிக்கும். அதிகமான மின்சாரத்தைச் செலவு செய்யும். மேலும், ஏ.சி-யின் ஆயுள்காலத்தையும் குறைத்துவிடும். எனவே, ஏ.சி-யின் கொள்ளளவு என்பது மிக முக்கியம்.

மின்திறன்

ஏ.சி என்பது அதிகமான மின்சாரத்தைச் செலவு செய்யும் சாதனம் என்பது நமக்குத் தெரியும். இந்தச் செலவை ஏ.சி-க்களின் ஸ்டார் ரேட்டிங்கைப் பார்த்து வாங்குவதன் மூலம் கொஞ்சம் குறைக்கலாம். உங்கள் ஏ.சி-க்களின் மின் திறனைப் (Energy Efficiency Rating) பொறுத்து அதன் மின்சக்தி செலவு செய்யும் அளவு இருக்கும். இதில் ஒரு ஸ்டார் முதல் ஐந்து ஸ்டார் வரை குறிக்கப்பட்டிருக்கும். இதில் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏ.சி-யைப் பொருத்துவதன் மூலம் மின் சக்தியை அதிகம் சேமிக்கலாம்.

நீண்ட நேரம் ஏ.சி-யைப் பயன்படுத்துபவர்கள் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏ.சி-க்களையே தேர்வு செய்யவும். ஒரு நாளைக்கு சில மணி நேரம் மட்டுமே பயன்படுத்துவோர் 3 ஸ்டார்களுக்கு மேல் ரேட்டிங்கொண்ட ஏ.சி-யைத் தேர்வு செய்யலாம்.

சர்வீஸ் குவாலிட்டி

ஏ.சி-யைப் பொருத்திய பின்பும் அதற்குப் போதுமான பராமரிப்புத் தேவை. எனவே, நல்ல சர்வீஸ் நெட்வொர்க்குக்காக பிராண்டட் கம்பெனிகளின் ஏ.சி-யை வாங்கலாம். ஏ.சி வாங்குவதற்கு முன்பே, அதன் சர்வீஸ் சென்டர்கள் பற்றியும் அறிந்துகொள்ளவும்.

கூடுதல் வசதிகள்

ஏ.சி-க்கள் என்பவை குளிர்ச்சிக்காகவே மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. பல ஏ.சி மாடல்கள் குளிர்காலங்களில் ஹீட்டராகவும் பயன்படுத்தப் படுகின்றன. இதுமட்டுமன்றி, உங்கள் வசதிகளுக்கேற்ப ஆன்டி பாக்டீரியல் ஃபில்டர், ஆட்டோ கிளீன் ஃபங்ஷன், டஸ்ட் ஃபில்டர் போன்ற கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஏ.சி-க்களைத் தேர்வுசெய்யலாம். இவற்றைப் பொறுத்து அவற்றின் விலையும் மாறுபடும்.

நான்-இன்வர்ட்டர் ஏ.சி-க்களைவிடவும், இன்வர்ட்டர் ஏ.சி-க்கள் பெட்டர் சாய்ஸ். காரணம், இன்வர்ட்டர் ஏ.சி-க்கள், அறையின் வெப்பநிலையைப் பொறுத்து கம்ப்ரஸருக்குக் கூடுதலாக அல்லது குறைவாக மின்சாரத்தை வழங்கும். ஆனால், நான்-இன்வர்ட்டர் ஏ.சி-க்கள் எப்போதும் ஒரே அளவிலான மின்சாரத்தையே கம்ப்ரஸருக்கு வழங்கும். இதன் மூலம் ஏ.சி-க்குக் குறைவான அளவே தேவைப்படும்போதும்கூட, அதிகமான மின்சாரம் செலவு செய்யப்படும். ஆனால், இன்வர்ட்டர் ஏ.சி-க்களில் இந்தப் பிரச்னை இல்லை.

 விலை

போன் முதல் கார் வரை எது வாங்கினாலும் முதலில் நாம் சிந்திப்பது அதன் விலை பற்றிதான். அது ஏ.சி விஷயத்திலும் முக்கியம். ஏ.சி.,யின் ஸ்டார் ரேட்டிங், சிறப்பம்சங்கள், ஏ.சி-யின் பிராண்ட், கொள்ளளவு ஆகியவற்றைப் பொறுத்து விலையில் மாறுதல்கள் ஏற்படும். ஏ.சி-யைத் தேர்வு செய்யும்போது இதனையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

முன்புபோல ஷோரூம்களில் சென்று, கடைக்காரர்கள் சொல்லும் ஏ.சி-யைத்தான் வாங்கவேண்டும் என்ற அவசியம் தற்போதில்லை. நீங்கள் வாங்க விரும்பும் மாடல்கள் பற்றிய விவரங்கள் இணையதளங்களிலேயே முழுமையாகக் கிடைக்கும்.

எனவே, அதுபற்றிய விவரங்களை நன்றாகத் தெரிந்துகொள்ளலாம். மேலும், ஷாப்பிங் தளங்களில் அதன் ரிவ்யூக்களைப் படிப்பதன் மூலம் இன்னும் எளிதாக முடிவெடுக்கலாம். இவையும் உங்களுக்குச் சரியான ஏ.சி-யை வாங்க கைகொடுக்கும்.

எந்த அறைக்கு, எந்த ஏ.சி?

பொதுவாக 10 x 10 என, 100 சதுரஅடி அளவுள்ள அறைக்கு 1 டன் அளவிலான கொள்ளளவு கொண்ட ஏ.சி தேவைப்படும். ஆனால், உங்கள் அறையில் இருக்கும் ஜன்னல்களின் எண்ணிக்கை, ஜன்னல்களின் அளவு, எத்தனையாவது மாடியில் உங்கள் வீடு அமைந்துள்ளது, அறையின் உயரம் ஆகியவற்றைப் பொறுத்து ஏ.சி-யின் கொள்ளளவு கூடுதலாகத் தேவைப்படலாம். சில பொதுவான அளவுகொண்ட அறைகளுக்குத் தேவையான ஏ.சி கொள்ளளவு அளவுகள் இங்கே…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *