உங்க இஷ்டத்துக்கு இனி சைக்கிள், பைக்கில் இனி இடியாப்பம் விற்க முடியாது  – Kumudam

Spread the love

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளைகளில் சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்வார்கள். இடியாப்பம்தான் பெரும்பாலான குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு காலை உணவாக மாறிவிட்டது. 

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவர்கள் இடியாப்பம் சாப்பிடுவதை அறிவுறுத்துவர். தெருக்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் என ஸ்பீக்கர் அறிவித்துபடி விற்பனை செய்வது அவசியம். 

இப்படி விற்பனை செய்யப்படும் இடியாப்பம் ஒரு சில இடங்களில் தரம் குறைந்த  விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத்துறைக்குத் புகார்கள் வந்துள்ளன. இந்த புகாரை தொடர்ந்து, சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி உரிமம் பெற வேண்டும் என உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும், உணவுப் பாதுகாப்புத்துறையின் வழிகாட்டுதலின் படி இடியாப்பங்கள் தயாரிக்க வேண்டும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியாப்பங்கள் தயாரிப்பதற்கான உணவுப் பாதுகாப்பு உரிமத்தை இணையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும், ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *