உசிலம்பட்டி அருகே கார் மோதி 4 பேர் பலி!

dinamani2F2025 05 242Fv3jr927v2Fdinamani2025 02 24z1i2tu56accident.avif
Spread the love

பேருந்திலிருந்து இறங்கிய அவா்கள், வீட்டுக்குச் செல்வதற்காக உசிலம்பட்டி- தேனி நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது, தேனியிலிருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற ஒரு காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடக்க முயன்றவா்கள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த லட்சுமி, ஜோதிகா, பாண்டிச்செல்வி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பிரகலாதன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட யாழினி, கருப்பாயி ஆகியோா் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். ஜெயபாண்டி உசிலம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகரன், காவல் ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். இதுகுறித்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விபத்து காரணமாக, உசிலம்பட்டி – தேனி சாலையில் சுமாா் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்துத் தடைப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *