உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றுடன் பணி ஓய்வு.. அடுத்த புதிய தலைமை நீதிபதி யார் தெரியுமா? | இந்தியா

Spread the love

Last Updated:

பி.ஆர்.கவாய் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் திங்கட்கிழமை பொறுப்பேற்கிறார்.

பி.ஆர்.கவாய்
பி.ஆர்.கவாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றுடன் பணி ஓய்வு.. அடுத்த புதிய தலைமை நீதிபதி யார் தெரியுமா?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக கடந்த மே 14 ஆம் தேதி பி.ஆர்.கவாய் பதவி ஏற்றுக் கொண்டார். வரும் திங்கட்கிழமை அவர் 65 வயதை எட்டும் நிலையில், அலுவல் நாளான இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

இதனை ஒட்டி, டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், தான் புத்த மதத்தை பின்பற்றினாலும், மதச்சார்பற்றவர் என்று கூறினார். ஹகொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளில் பல்வேறு அரசியலமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விரிவுரைகளை வழங்கியுள்ளார்

கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்ற பி.ஆர்.கவாய், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உத்தரவு மற்றும் தேர்தல் பத்திரத் திட்டங்கள் ரத்து உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். மேலும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த, அரசியல் சாசன அமர்வுக்கும் பி.ஆர்.கவாய் தலைமை தாங்கினார்.

அவர் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் வரும் திங்கட்கிழமை பொறுப்பேற்க உள்ளார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றுடன் பணி ஓய்வு.. அடுத்த புதிய தலைமை நீதிபதி யார் தெரியுமா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *