விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் “ஜனநாயகன்’ வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது.
விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், அ.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

எப்போதுமே விஜய் பட இசை வெளியீட்டு விழா என்றாலே சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெறும். ஆனால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவிருக்கிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் ‘தளபதி திருவிழா’ என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர்.