உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்! -ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோர்

Dinamani2f2025 01 062fv0o6r7132fpti01062025000342b.jpg
Spread the love

பாட்னா: பிகாரில் அரசுப் பணி முதல்நிலை தோ்வு வினாத்தாள் கசிந்த சா்ச்சையால், அம்மாநிலத்தில் மொத்தம் 5 லட்சம் போ் எழுதிய முதல்நிலைத் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நீடித்துவருகின்றன.

‘ஜன் சுராஜ்’ கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோா், பாட்னாவின் காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் மேற்கொண்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 5-ஆவது நாளாக இன்றும்(ஜன. 6) தொடர்கிறது.

இதனிடையே, இன்று அதிகாலை அவரைக் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் ஜாமீனில் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “காந்தி திடலில் சத்தியாகிரகம் செய்வது சட்டத்தை மீறும் செயல் அல்ல” என்று குறிப்பிட்டு தன்னை நிபந்தனைகளின்றி ஜாமீனில் விடுவித்திருப்பதாகக் கூறினார். மேலும், உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

முன்னதாக, “தன் மிது தவறு ஏதுமில்லாத காரணத்தால் சிறை செல்வதற்குக் கூட எனக்கு சம்மதம்தான், ஜாமீன் தேவையில்லை” என பிரசாந்த் கிஷோர் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிகார்: ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவுக்கு பிரசாந்த் கிஷோா் அழைப்பு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *