இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவை ஆர்.கே.செல்வமணி, அமீர், சீமான், கலைப்புலி தாணு, ஏ.ஆர். முருகதாஸ், சீனு ராமசாமி உள்ளிட்ட சிலர் நேரில் சென்று நலம் விசாரித்திருக்கின்றனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி, “சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதனைத் தெளிவுபடுத்துவதற்காக அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்து வந்தோம்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் உறுப்புகள் நன்றாக இருக்கின்றன. இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது. தவறான செய்தியைப் பரப்பாதீர்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவரின் உடல்நலம் தேற பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.