“உண்மையிலேயே இன்று நான் உங்களுடன் சிறந்த உரையாடலைக் கொண்டிருந்தேன்”- விஜய் தேவரகொண்டாவுடன் அபிஷன் ஜீவிந்த்| i-truly-had-a-great-conversation-with-you-abishan-jeevind-with-vijay-deverakonda

Spread the love

“டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘வித் லவ்’.

இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் ‘வித் லவ்’ படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

கடந்த பிப்.6 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் ‘வித் லவ்’ படத்திற்காக அபிஷன் ஜீவிந்த்தை விஜய் தேவரகொண்டா நேரில் சந்தித்து பாராட்டியிருக்கிறார்.

இததொடர்பாக அபிஷன் ஜீவிந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், “விஜய் தேவரகொண்டா அண்ணாவிடம் இருந்து ‘With Love’… என்னுடன் நேரம் ஒதுக்கி பேசியதற்காக, அண்ணாவுக்கு நன்றி.

உண்மையிலேயே இன்று நான் உங்களுடன் சிறந்த உரையாடலைக் கொண்டிருந்தேன்.

உங்களுடைய பாராட்டும், அன்பான வார்த்தைகளும் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன.

மிகவும் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *