அதில், “சமீபகாலமாகப் பலராலும் பேசப்பட்டு, அமைதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள சிறை திரைப்படத்தை ஒருவழியாகப் பார்த்துவிட்டேன். இது அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். ஒரு சாதாரண கதையை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அனைவருமே அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக விக்ரம் பிரபுவைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்.

அந்த கதாபாத்திரத்தைப் புரிந்து கொண்டு, மிகக் கட்டுக்கோப்பான நடிப்பை நீ வழங்கியிருப்பது, “புலிக்குப் பிறந்தது பூனையாகாது” என்பதை நிரூபிக்கிறது. உன்னைப் பார்த்து மிகவும் பெருமையாக இருக்கிறது.
சரியான நடிகர்களைத் தேர்வு செய்ததற்காக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி பாராட்டுக்குரியவர். உண்மையில் படத்தில் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது. ஒரு தேவையில்லாத காட்சியோ, வேண்டாத பாடல்களோ எதுவுமே இல்லை. இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.