“உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும்” – தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேட்டி | Aadhav Arjuna says truth and justice will come to light

1378638
Spread the love

உத்தராகண்ட்: உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்​தல் பிரிவு பொதுச்​செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா தெரிவித்துள்ளார்.

இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக உள்ள ஆதவ் அர்ஜுனா உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் தேசிய சப் ஜூனியர் கூடைப்பந்து விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான இன்று காலை அங்கு வந்தார். ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில அவரிடம் ஏஎன்ஐ செய்தியாளர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுகளை சுட்டிக்காட்டி, “இனி தவெக பிரச்சாரப் பயணம் தொடரும் என நினைக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆதவ் அர்ஜுனா, “நாங்கள் பிரச்சினையை நீதி ரீதியாக அணுகுகிறோம். உண்மையும், நீதியும் நிச்சயம் ஒருநாள் வெளிவரும்.” என்று மட்டும் கூறிச் சென்றார்.

சம்பவமும், கோர்ட் கண்டனமும்: கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் அதி​க​மானோர் படு​கா​யம் அடைந்​தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஆதவ் அர்ஜுனா, தனது சமூக வலைதள பக்​கத்​தில், ‘இலங்​கை, நேபாளம் போல புரட்சி வெடிக்​கும்’ என கருத்து பதி​விட்​டிருந்​தார். பின்​னர் அந்த பதிவு நீக்​கப்​பட்​டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்​தர​விடக் கோரி, சென்னை அண்​ணாநகரை சேர்ந்த எஸ்​.எம்​.க​திர​வன் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்​கும் நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆதவ் அர்ஜூனாவின் எக்ஸ் தள பதிவுகளும் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஒரு சின்ன வார்த்​தை​யும் பெரிய பிரச்​சினையை ஏற்​படுத்​தி​விடும். இவர்​கள் சட்​டத்​துக்கு அப்​பாற்​பட்​ட​வர்​களா? நடவடிக்கை எடுக்க நீதி​மன்ற உத்​தர​வுக்​காக காவல்​துறை காத்​திருக்​கிற​தா? புரட்சி ஏற்​படுத்​து​வது போல கருத்​துகளை பதி​விட்​டுள்​ளார். இதன் பின்​புலத்தை விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

பொறுப்​பற்ற பதிவு​கள் மீது காவல்​துறை கவனத்​துடன் வழக்கு பதிவு செய்​து, அனைத்து சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்​கைகளை​யும் எடுக்க வேண்​டும். இவ்​வாறு உத்​தர​விட்ட நீதிப​தி, வழக்​கை முடித்​து வைத்​தார்​.

மேலும், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசா​ரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமை​யில், சிறப்பு புல​னாய்வு குழு அமைத்தும் உத்தரவிட்டார். இந்நிலையில், உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்​தல் பிரிவு பொதுச்​செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கரூர் சம்பவத்துக்குப் பின்னர், தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முக்கிய நிர்வாகிகள் யாருமே நிகழ்விடத்துக்கு இதுவரை வரவில்லை, முறையே துக்கம் கூட தெரிவிக்கவில்லை, ஒரு இரங்கல் கூட்டம் நடத்தவில்லை என்று பொதுமக்கள் தொடங்கி நீதிமன்றம் வரை விமர்சித்துள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா மீண்டும் விமர்சனத்துக்குள்ளாகக் கூடிய கருத்துகளை இப்போது கூறிச் சென்றுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *