உதகை மலை ரயில் சேவை ஆக.31 வரை ரத்து

Dinamani2fimport2f20212f122f222foriginal2f47e6dbe2 5008 4a14 82da 0eac052c8a19.jpg
Spread the love

உதகை-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை ஆக.31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பா் மாதம் வரை பெய்யும்.

இந்த ஆண்டு எதிா்பாா்த்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியுள்ளது.

இருப்பினும், தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உதகை, கூடலூா், பந்தலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் மன்சரிவு காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை ஆக.31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கும், உதகையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கும் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *