‘உதயசூரியன் சின்னம்…’ மதிமுகவை நிர்பந்திக்கும் திமுக? டென்ஷனில் துரை வைகோ! | MDMK Durai vaiko seems to unhappy on DMK’s Move

Spread the love

இதுகுறித்து நம்மிடம் பேசிய ம.தி.மு.க சீனியர்கள் நிர்வாகிகள் “2026 சட்டமன்றத் தேர்தலில் 12 இடங்களில் போட்டியிட்டு குறைந்தது 7 இடங்களில் வெற்றிபெற்று தேர்தல் ஆணையத்தின் மாநில கட்சி அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. ஆனால் தற்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டு 6 தொகுதிகளை ஒதுக்குங்கள், தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம் என கேட்டிருந்தோம். ஆனால் 4-5 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என கறார் காட்டுகிறது அறிவாலயம்.

துரை வைகோ

துரை வைகோ

அதிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் நீங்கள் நிற்க வேண்டும் என தலைவரிடம் முதலமைச்சரே நேரடியாக கோரியிருக்கிறார். முதல்வரே நேரடியாக பேசுவதால் பொதுச்செயலாளர் வைகோ ஒப்புக்கொள்ளலாமா என்ற சிந்தனையில் இருக்கிறார்.

ஆனால், இதில் துரை வைகோவுக்கு துளியும் விருப்பமில்லை. ‘நாடாளுமன்றத் தேர்தலில் போராடி தனிச் சின்னத்தில் நிற்கும் வாய்ப்பை பெற்றோம். இப்போது மீண்டும் தனிச்சின்னத்தில் நிற்க சொல்வது ஏற்கவே முடியாது. தி.மு.க-வின் இந்த கோரிக்கையை நாம் ஏற்க கூடாது’ எனக் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகிறார்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *