உத்தரகண்ட் மாநிலம் நிதி பள்ளத்தாக்குப் பகுதியில் 10 கிலோ மீட்டர் அகலம் கொண்ட மிக வேகமாக வளரும் பனிப்பாறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பனிப்பாறைகள் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள் குழுவினர், மிக வேகமாக வளர்ந்து வரும் புதிய பனிப்பாறையை கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மலைப் பிரதேசமான உத்தரகண்டின் வட எல்லைப் பகுதியில் கிட்டத்தட்ட இந்தியா – திபெத் எல்லையில் இந்த பனிப்பாறை அமைந்துள்ளது.
இந்த பனிப்பாறைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. இது ரண்டோல்ப் மற்றும் ரேகனா பனிப்பாறைகளுக்கு அருகே 48 சதுக கிலோ மீட்டரில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செயற்கைக் கோள் தகவலின் மூலம் இந்த பனிப்பாறை பற்றிய தகவல் கிடைத்திருப்பதாகவும், தற்போது இது வேகமாக வளர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரலாஜிகல் சமநிலையின்மையே இதற்குக் காரணம் என்றும் தண்ணீரின் நீர்த்தன்மை குறைந்து அவை படிப்படியாக பனித்திட்டுகளாக மாறுவதால் இந்தப் பனிப்பாறை வேகமாக வளர்வதாகவும் கூறப்படுகிறது. இதன் கெடுபயனாக சில வேளைகளில் பனிப்பாறைகள் உடைந்து கீழே விழும் அபாயமும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.