உத்தரகண்ட் நிதி அமைச்சர் ராஜிநாமா

Dinamani2f2025 03 172f5hx3l5wd2futtar.jpg
Spread the love

உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார்.

உத்தரகண்டில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மலைவாழ் மக்கள் குறித்து நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் போராட்டங்களும் அரங்கேறின.

பின்னர் அமைச்சர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். முதல்வர் புஷ்கர் சிங் தாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை பிரேம்சந்த் வழங்கினார்.

அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை

எனது வார்த்தைகளுக்கும் அவற்றின் தாக்கத்திற்கும் நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று பிரேம்சந்த் பதவி விலகும்போது கூறினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நமது மாநிலம் முன்னேற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

மாநில முன்னேற்றத்திற்காக உதவுவதற்கு நான் எந்த வகையிலும் பங்களிக்கத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *