அதன்படி, உடனடியாக இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மதுரை காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உடனடியாக காணொளி மூலம் ஆஜராக வேண்டும்” என்று அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார்.
அதோடு, “ஆஜராகவில்லையென்றால் கடுமையான உத்தரவைப் பிறப்பிக்கவும் தயங்க மாட்டேன்” எனவும் எச்சரித்தார்.
அதன்படி விசாரணையில் ஆஜரான காவல் ஆணையர் லோகநாதனிடம், “நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா?” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வியெழுப்பினார்.

அதற்கு, “பேரிகார்டுகளை அமைத்து பிற்பகல் 3:30 மணி முதல் நடவடிக்கை எடுத்தோம். ஆனால், கூட்டம் அதிகமாகி பிரச்னை ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்” என்று காவல் ஆணையர் பதிலளித்தார்.
விசாரணை முடிவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், “தீபம் ஏற்றுவதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன்” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார்.