உத்தவ் தாக்கரேவுடன் பைசாபாத் எம்.பி. சந்திப்பு

Dinamani2f2024 072f540412bd 5fa0 4be9 Adc6 76e17da830082fuddhav.jpg
Spread the love

அண்மையில் நடைபெற்ற உத்தர பிரதேச மாநிலத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியை தழுவியது.

தேர்தலில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவைச் சேர்ந்த லல்லு சிங்கை தோற்கடித்தார்.

பைசாபாத் தொகுதியில் பிரசாத் வெற்றி பெற்றது எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சிவசேனை (யுபிடி) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை பைசாபாத் தொகுதி எம்.பி. அவதேஷ் பிரசாத் இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிர எம்எல்ஏக்கள் அபு அஸ்மி, ரைஸ் ஷேக் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து ஆதித்யா தாக்கரே கூறுகையில், இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே பல விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடந்தன. அவதேஷ் பிரசாத் நீண்ட காலமாக ராமர் மற்றும் அயோத்தி மக்களுக்கு சேவை செய்து வருகிறார், இது அவரது வெற்றிக்கு வழிவகுத்தது என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *