தங்கம் விலையில் நேற்று மாலையிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கு விற்பனையனது.
ஆபரணத் தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,550க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு காலையில் ரூ.20 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.345க்கும் விற்பனையனது.
இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரணமான சூழலால், தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.3,55,000-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.355-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
