முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஶ்ரீகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தா இருவருக்கும் நேற்று (நவ.28) திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சம்யுக்தாவின் நெருங்கிய தோழியும், தொகுப்பாளருமான பாவனா திருமண வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “அன்புள்ள சம்யுக்தா… உன்னுடைய இதயம் மிக வலுவாக இருக்கிறது. கஷ்டமான காலங்களையும் கடந்து செல்லும் பலம் உன்னிடம் இருக்கிறது.
இந்தத் திருமண நாளில் உனது முகத்தில் சிரிப்பு, பூரிப்பை பார்க்கிறேன். அதைவிட முக்கியமாக உன்னுடைய மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது.