மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். நாங்கள் மருத்துவமனைக்கு விரைந்தோம். அங்கு எதிரியைக்கூட இது போன்று யாரும் கொலை செய்யமாட்டார்கள். அந்த அளவுக்கு மோசமாக அடித்திருந்தனர். தலையில் பின்னால் இருந்து டம்ப்பாலால் அடித்து இருந்தனர். எனது சகோதரி உடம்பு முழுக்க காயம் இருந்தது. 5 நாள் சிகிச்சைக்கு பிறகு இறந்துவிட்டார்”‘என்றார்.
காஜல் தந்தை ராகேஷ் இது குறித்து கூறுகையில்,”திருமணத்தின் போது விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கொடுத்தோம். புல்லட், தங்க நகைகள், பணம் கொடுத்தோம். அப்படி இருந்தும் வேறு யாரையாவது திருமணம் செய்திருந்தால் கார் கிடைத்திருக்கும் என்று அன்குர் வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அதனால் எனது மகள் காரையும் ஏற்பாடு செய்து கொடுத்தாள். அப்படி இருந்தும் சித்ரவதை குறையவில்லை. எங்களது மகளிடம் சுதந்திரமாக பேசக்கூட முடியாமல் இருந்தது.
வேலைக்கு சென்று வந்த பிறகு வீட்டு வேலைகள் அனைத்தையும் எனது மகளிடம் செய்ய சொன்னார்கள். கர்ப்பமாக இருந்தபோதிலும், துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவது என அனைத்து வேலைகளையும் செய்ய சொன்னார்கள்” என்றார். கடந்த 5 மாதத்திற்கு முன்பு ஒரு முறை இதே போன்று காஜலை அவரது கணவர் அடித்துள்ளார். அந்நேரம் நிகில் அங்கு சென்று தனது சகோதரியிடம்,உனக்கு எப்போது வீட்டுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறாயோ அப்போது வந்துவிடு என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
திருமணம் முடிந்த பிறகு அவர்கள் ஹரியானாவில் தங்கி இருந்தனர். அங்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தம்பதி டெல்லியில் வீடு வாடகைக்கு எடுத்து வந்து தங்கி இருந்தனர். காஜலும், அன்குரும் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.