உடலில் சமநிலை குறையும்போது முதலில் தசைப்பிடிப்பு (Muscle cramps) ஏற்படும்; கை, கால்கள் மரத்துப்போனது போன்ற உணர்வு உண்டாகும்.
சோடியம் அளவு குறையும்போது உடல் மிகவும் சோர்வடைந்து, சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் போகும். எலக்ட்ரோலைட் அளவு மிக அதிகமாகக் குறைந்தால், படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூட முடியாத நிலை ஏற்படும். எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 5 கிராம் முதல் அதிகபட்சம் 7-8 கிராம் வரை உப்பு அவசியம். ஆனால், உப்பை அளவுக்கு அதிகமாகச் சேர்க்கக் கூடாது; அது உடலில் தேவையற்ற நீர் தங்க வழிவகுக்கும்.

இனிப்பைப் பொறுத்தவரை, வெள்ளை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில், அது ‘சிம்பிள் கார்போஹைட்ரேட்’ வகையைச் சார்ந்தது. அதற்கு பதிலாக ‘காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்’ நிறைந்த வெல்லம், பனைவெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரையைப் பயன்படுத்தலாம். வெள்ளை சர்க்கரையைத் தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலுக்குத் தீங்கானவை.
வெள்ளை சர்க்கரையைத் தவிர்ப்பது நீரிழிவு நோய் (Diabetes), புற்றுநோய் (Cancer), சரும நோய்கள் மற்றும் உடல் எடை குறைப்பிற்கு (Weight loss) மிகவும் உதவியாக இருக்கும். அந்த வகையில் சர்க்கரையைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதுதான்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.