உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்

Dinamani2fimport2f20202f122f82foriginal2fsupreme Court11.jpg
Spread the love

புது தில்லி: ஓ. பன்னீர்செல்வம் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

2001 – 2006ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின்போது ஓ. பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக, திமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், 2009ஆம் ஆண்டு இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

ஆனால், 2012ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த போது, ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மனுவை ஏற்று வழக்கிலிருந்து அனைவரையும் விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *