மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ள கப்பல், கடலில் பாதுகாப்பாக இறங்கியுள்ள டிராகன் விண்கலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அடுத்த 30 – 60 நிமிடங்களில் அதிலிருந்து வீரர்கள் வெளியே அழைத்து வரும் பணி தொடங்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஒவ்வொரு வீரர்களாக விண்கலனிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு கப்பலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.