அதேமாதிரி, அரையிறுதுதியில் பெத்தேல் கதிகலங்க வைக்க போட்டியை இந்தியா வெல்ல சூர்யாவின் பௌலிங் ரொட்டேஷனும் முக்கிய காரணமாக இருந்தது. பும்ராவின் ஸ்பெல்லை சீக்கிரமாகவே முடிக்க வைத்து எக்கனாமிக்கலாக கட்டுப்படுத்தி, கடைசி ஓவரில் பெரிய டார்கெட்டை இங்கிலாந்துக்கு கொடுத்திருந்தார். அக்சர் படேல் கடைசி ஓவரை வீசுவார் என எதிர்பார்க்க, துபே கையில் பந்தை கொடுத்து அந்தப் போட்டியை வென்றிருப்பார். அதேமாதிரி, இறுதிப்போட்டியில் அபிஶேக்கை டிராப் செய்துவிட்டு ரிங்கு சிங்கை லெவனுக்குள் கொண்டு வர வேண்டுமென ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால், சூர்யா அபிஷேக்கை நம்பி வாய்ப்பு கொடுத்தார். அபிஷேக்கும் அந்த நம்பிக்கையை காப்பாற்றினார். பௌலிங்கின் போதுமே நியூசிலாந்து வீரர்கள் வேகப்பந்தை நன்றாக எதிர்கொள்கிறார்கள் என்பதால், திடீரென 3 வது ஓவரிலேயே அக்சரை அழைத்து வந்திருப்பார். அந்த மூவுக்கு பலனும் கிடைத்தது டிம் சீபர்ட் வீழ்ந்தார். இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது. பும்ராவையும் கொஞ்சம் சீக்கிரமாக 4 வது ஓவரிலேயே கொண்டு வந்து ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டை எடுக்க காரணமாக இருந்திருப்பார்.
ஒரு வீரராக சூர்யா இந்தத் தொடரில் சோபிக்காவிடிலும் கேப்டனாக முக்கியமான தருணங்களில் திறம்பட செயல்பட்டிருக்கிறார் என்பதை மறுக்கவே முடியாது. வாழ்த்துகள் சூர்யா!