உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.தில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் கே. எல்.ராகுல் இடம் பெறவில்லை.
அஜித் அகர்கர் விளக்கம்
இது விமர்சனத்திற்கு உள்ளானது. நல்ல பார்மில் இருக்கும் கே.எல். ராகுலை 15 பேர் கொண்ட அணியில் சேர்க்காதது ஏன் என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் கே.எல்.ராகுல் இந்திய அணியில் சேர்க்கப்படாதது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது:-
கே.எல். ராகுல் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக செயல்பட்டு வருகிறார்.சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட்
நாங்கள் நடுவரிசையில் எந்த வீரர்களை தேர்வு செய்யலாம் என்பது குறித்து தான் யோசித்து வந்தோம். மேலும் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோர் நடு வரிசையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சஞ்சு சாம்சனை பயன்படுத்தலாம்.
எது தேவையோ
எனவே எங்களுக்கு எது தேவையோ அதற்கு ஏற்ற வகையில் நாங்கள் அணியை தேர்வு செய்தோமே, தவிர இவரை விட அவர் சிறந்தவர் என்ற பாணியில் அணியை தேர்வு செய்யவில்லை .
இவ்வாறு அஜித் அகார்கர் விளக்கம் அளித்துள்ளார்.