உலகம் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை: கிறிஸ்துவமக்கள் திரளாக பங்கேற்பு  – Kumudam

Spread the love

வேளாங்கன்னியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 

நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் உள்ள புனித ஆரோக்​கிய மாதா பேரால​யத்​தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்​னிட்டு விண்​மீன் ஆலய வளாகத்​தில் குடில் அமைக்​கப்​பட்​டது. கிறிஸ்துமஸ் பண்​டிகையை வரவேற்​கும் வகை​யில் பேராலய தியான மண்​டபம் செல்​லும் வழி​யில் மின் விளக்​கு​களால் பந்​தல் அமைக்​கப்​பட்​டிருந்​தது.

பேரால​யத்​தைச் சுற்றி அலங்​கார மின்​விளக்​கு​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. மேலும், பேரால​யத்​தின் முன்பு 43 அடி உயரத்​தில் பிரம்​மாண்ட கிறிஸ்துமஸ் மரம் புனிதம் செய்​யப்​பட்டு திறந்து வைக்​கப்​பட்​டது.

நேற்று இரவு 11.30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி விண்​மீன் ஆலயத்​தில் நடந்​தது. சிறப்பு திருப்​பலியைத் தொடர்ந்து குழந்தை இயேசு சொரூபம் வான தேவதைகளால் பவனி​யாக எடுத்​து​வரப்​பட்டு பேராலய அதிபரிடம் வழங்​கப்​பட்​டது. நள்​ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பெற்ற பங்​குத்​தந்தை அற்​புத​ராஜ், அரு​கில் உள்ள குடிலில் வைத்து இயேசு பிறந்​த​தாக அறி​வித்​தார்.

இந்​நிலை​யில், பேராலய அதிபர் இருதய​ராஜ், பொருளாளர் உலக​நாதன், நிர்​வாகத் தந்தை பரிசுத்​த​ராஜ், உதவி பங்​குத் தந்தை ஆரோஜேசு​ராஜ் மற்​றும் நிர்​வாகத் தந்​தையர்​கள், அருள் சகோ​தரி​கள், சகோ​தரர்​கள், சுற்​றுலாப் பயணி​கள் மற்​றும் கிறிஸ்​தவர்​கள் ஆயிரக்​கணக்​கானோர் கலந்து கொண்​டனர்.

நாடுமுழுவதும் கோலகலம்

டெல்லியில் உள்ள செயின்ட் தாமஸ்தேவலாயம் வண்ண விளக்குகளால்அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது.ஜம்மு காஷ்மீரின்ஸ்ரீநகரில் அமைந்துள்ள புனிதகத்தோலிக்க தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் மின் விளக்குகளால் ஜொலித்தன.

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டுவீதிகளில் வண்ணவிளக்குகள் தோரணங்களாகவும், பல்வேறுவடிவங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன.ஆந்திர மாநிலம்விஜயவாடாவில் பிரமாண்டமாகஅமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்மற்றும் கிறிஸ்துமஸ் குடில் அனைவரதுகவனத்தையும் ஈர்த்தது.

கர்நாடக மாநிலம் கலபுராகியில்உள்ள செயின்ட் மேரிஸ் தேவலாயம் வண்ண விளக்குகளால் பிராகசித்தது. தெலங்கானாவின் செகந்திரபாத் செயின்ட் மேரிஸ்பெசிலிகா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ்சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கனககுன்றுபொழுது போக்கு பூங்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுநடைபெற்ற கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

தமிழகத்திலும் உற்சாக கொண்டாட்டம் 

சென்னை சாந்தோமில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க புனித தோமையார் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஆயிரக்கனக்கான கிறிஸ்தவ மக்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்று உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர்.

மேலும், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். மேலும் குறிப்பாக சென்னை சாந்தோம் புனித தோமையார் தேசிய தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி 25 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது. பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கிறிஸ்துமஸ் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பகிர்ந்தளிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் தேவாலாயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மத வேறுபாட்டை கடந்து, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பலரும் குடும்பத்தினருடன் பங்கேற்று உற்சாகமடைந்தனர்.

டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி 

பிரதமர் மோடி இன்று காலை தில்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் மக்களுடன் கலந்துகொண்டார். கிறிஸ்துமஸ் பாடல்கள், பிரதமர் மோடி வருகையையொட்டி அவருக்கான பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் அங்குள்ள அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “தில்லியில் உள்ள பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் கலந்துகொண்டேன். அன்பு, அமைதி மற்றும் கருணை என காலத்தால் அழியாத செய்திகளை இந்த கூட்டம் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *