உலகம் ஏதோ ஓர் இடத்தில் தொடங்கி ஏதோ ஓர் இடத்தில் முடிகிறது என்றால், அந்த கடைசி சாலை முடியும் இடம் நார்வேயில் அமைந்துள்ளது.
நமது கிரகம் ஒரு கோளம் என்பதால் அதற்கு தொடக்கமோ முடிவோ இல்லை. ஆனால், ஓரிடத்துக்கு மேல் நிலப்பரப்பு முடிகிறது, அதற்கு மேல் நிலப்பரப்பே இல்லை என்பதால்தான், இது உலகின் கடைசி சாலை என்று கூறப்படுகிறது.
இந்த சாலை முடியும் இடம், மிகப்பெரிய பனிப்பாறைகளும், பனியாக மாறிய கடல்பரப்புமாகக் காட்சியளிக்கும் என்றும் கூறுகிறார்கள்.
நார்வேயில் உள்ள இ-69 நெடுஞ்சாலைதான், உலகின் கடைசி சாலை என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. இந்த சாலை, வடக்குத் துருவத்துக்கு அருகில் முடிகிறது. இதற்கு மேல் நிலப்பரப்பு இல்லை என்பதால், சாலை ஓரிடத்தில் முடிந்துவிடும் அதிசயத்தை இங்குக் காணலாம்.