உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியாவால் முன்னேற முடியுமா? சாத்தியக்கூறுகள் என்னென்ன? | Can India advance to the World Test Championship final? What are the chances?

Spread the love

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்ட பிறகு முதல் இரண்டு எடிஷனில் (2019-21, 2021-23) இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி.

கடந்த எடிஷனில் (2023-25) இறுதிப் போட்டிக்கு செல்ல சுலபமான வாய்ப்பிருந்தும் சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 3 – 0 என தொடரை இழந்து அந்த வாய்ப்பைக் கடினமாக்கிக் கொண்ட இந்தியா, அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவிடம் 3 – 1 எனப் பார்டர்-கவாஸ்கர் தொடரை இழந்ததால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் 2 – 0 என இந்தியா ஒயிட் வாஷ் ஆனதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு சவாலானதாக மாறியிருக்கிறது.

நடப்பு எடிஷனில் (2025-27) இதுவரை இந்திய அணி 3 டெஸ்ட் தொடர்களில் ஆடியிருக்கிறது.

அதில், 9 டெஸ்ட் போட்டிகளில் (இங்கிலாந்து 5, வெஸ்ட் இண்டீஸ் 2, தென்னாப்பிரிக்கா 2) 4-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டு புள்ளிப்பட்டியலில் 48.15 சதவிகித புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு இறங்கியிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவுடனான தொடருக்கு முன்பாக புள்ளிப்பட்டியலில் 55.88 சதவிகித புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தது.

தற்போது 7 சதவிகித புள்ளிகள் குறைந்து 5-வது இடத்துக்கு இந்தியா இறங்கிவிட்டதால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கடினமாகியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *