மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத் துறையில் காலியாக உள்ள 394 இளநிலை புலனாய்வு அலுவலர் பணிக்கு தகுதியும் ஆர்வமும் இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Intelligence Officer-II/Tech (JIO-II/Tech)
காலியிடங்கள்: 394 (SC-60, UR-157, EWS-32, OBC-117, ST-28)
சம்பளம் : மாதம் ரூ.25,500 – 81,100
வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், தகவல் தொழில்நுட்பம், கணினி பொறியியல், கம்பியூட்டர் அப்பிளிகேசன் போன்ற ஏதாவதொன்றி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், கணிதம் பிசிஏ, பி.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 14.9.2025 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். விதவை பெண்களுக்கு அரசின் விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.